என் காதல் ராணி
வான் எங்கும்
பல கோடி நட்சத்திரங்கள்
நிறைந்திருந்தும்...
வானில் தனித்து நின்று
இரவை ஆட்சி செய்யும்
நிலவு போலத்தான் "நீ" எனக்கு!
பல கோடி பெண்கள்
மண்ணில் படைக்கப்பட்டிருந்தும்..
என்னுள் தனித்து நின்று
என் மனதை ஆள்கிறாய்
காதல் ராணியாய்!!!😍
❤️சேக் உதுமான் ❤️