அவள்
உன் கோலவிழிப் பார்வையிலும்
மலர்ந்தும் மலராப் புன்னகையிலும்
தேங்கி நிற்கும் அர்த்தப் புஷ்டிகள்
ஒவ்வொன்றாய் அவிழ அத்தனையும்
அள்ளி முடித்தேன் இதோ கோர்க்க
தொடங்கினேன் கவிதையாக்க
நீண்டுகி கொண்டே போனது மாலையும்
காவியமாகிடும் என்று நினைத்தேன்
இன்னும் முடிக்க முடியாது
முற்றுப்பெறா கவிதைக் கோவை