அவளும் அல்லியும்

மயக்கும் மாலைப்பொழுதும் மெல்ல மறைய
இரவும் மெல்ல இருள் போர்வைப் போர்த்திட
இருளை போக்கிட இந்துவும் வந்துதித்தான்
கீழ்வானில் தடாகக் கரையில் கண்ணியவள்
காத்திருந்தாள் காதலன் வருகைக்காக இன்னும்
அவன் வாராது போக அவள்முகம் வாட
அதைக் மனம் பொறுக்கா அல்லியும்
இந்துவின் வருடலுக்கும் பூக்க மறந்து
வாடியதோ இவளுக்காக மொட்டு மொட்டாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-May-20, 11:02 am)
பார்வை : 101

மேலே