உதவாதினி ஒரு தாமதம்
பழமை பேணி பண்பு கொண்டு
வளர்ந்த சமூகம் உன் சமூகம் தமிழா
இன்றே அதை இழந்து வாழலாமா
அதை இழந்து வந்துவிட்டால்
எதிர்காலம் இன்றியே நீ அழிந்திடுவாய்யட
உந்தன் வரலாறை நாளை சொல்லிநிற்க
தடை தன்னை உடைத்து நடைகொள்ளடா
சூறாவளியாய் சுயநலன்கள் மேலோங்கி வந்தாலும்
நிம்மதியை தொலைத்து துன்பங்கள் தந்தாலும்
உன்னிலே மாற்றங்கள் உறங்கி போனால்
நாளைய நாளிலே உன்னுடைய பெருமைகள்
வற்றி போகுமடா இதையே நினைவில்கொண்டு
தமிழா இன்றே விழித்து கொள்ளடா
தாய் தந்தையின் அடையாளத்தை காத்துக்கொள்ளவே
அழிவின்றி சந்ததியின் கலாச்சாரம் வந்துவிடவே
உயிராக அன்னையை நேசித்து உரமாக மாறிவிடு
உதவாதினி ஒரு தாமதம்
அகிலன் ராஜா

