இருட்டில் பூக்கும் புன்னகை பூவே
இருட்டில் பூக்கும் புன்னகை பூவே
-**************************************
இருட்டில் பூக்கும் புன்னகை பூவே
---இரவின் கனவிலே வரும் நிலவே
உயிரிலே கலந்த உயிரின் திருவே
--உனக்காய் இரவினை களவாடிய கள்ளியே
என்னோடு தினமும் பக்கத்திலே இருக்கிறாய்யே
காயம் காணும்போதெல்லாம் புன்னகை வீசியே
காயத்திற்கு ஆறுதல்தரும் அதிசயம் செய்பவளே
நிலவாய் அழகு கொண்ட அழகியே
எப்பவுமே என்னோடு கலந்து போனதாலே
மகிழ்வாயே வானத்திலே பறக்கவே
வேகம் கொள்கின்றனவே இதய துடிப்புகள்
அன்பே நீ மட்டுமே போதுமே
உன் சுவாசம் என்னோடு எப்பவும்
உரிமையோடு உணர்வாய் உறவாய் உறங்குமே
அழகே நீ மட்டுமே என்னோடுஇரு
ஆயுள்வரை ஆகாயத்தில் ஆரோக்கியமாய் சிறகடிப்பேன்