216 செருக்கு, கள், காமம், தீ, தற்கொலை கொலையே – கொலை 3
கலி விருத்தம்
விளம் விளம் மா கூவிளம்
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு)
முனைவுகட் காமம்வெம் முரண்மு தற்கொலை
வினையினுக் கேதுவாம் வினைக்க மைந்திடல்
மனையினிற் றீயிடல் மண்ணில் தற்கொலல்
இனையயா வுங்கொலை யென்னும் வேதமே. 3
– கொலை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”தான் என்ற திமிர், மதுபானம் (கள்) அருந்துவது, காமத்தினால் செயல்படும் செய்கைகள், கொடிய பகை முதலியன கொலைச் செயலைத் தூண்டுவதற்குக் காரணமாகும். இத்தகைய செயல்களை மேற்கொள்வது, பிறர் வீட்டில் தீ வைப்பது, தற்கொலை செய்து கொள்வது ஆகிய யாவும் கொலையே என்று வேதம் சொல்கிறது” என்கிறார் இப்பாடலாசிரியர்.
முனைவு – செருக்கு, தான் என்ற திமிர்,
கள் – மதுபானம், ஏது – கருவி, காரணம்.