ரணமாகி கசியட்டும்

இருப்பதுபோல் இல்லை
இல்லாமலும் இல்லை
நினைப்பதுபோல் இல்லை
நினைக்காமலும் இல்லை
அருகில் நெருங்கி இல்லை
விலகியும் செல்லவில்லை
தேடுவது போல் இல்லை
தேடாமலும் இல்லை

கரைத்தக் கண்ணாடித் துகளை விழுங்கி
தொண்டைக் குழிக்குள் ரணமாகி
கசிவதுபோல் உணர்வு.....

காலம் சொல்கிறது
ஜீரணபவ...
மனம் சொல்கிறது கசிதல் தொடர்க....

எழுதியவர் : வை.அமுதா (5-May-20, 1:39 pm)
பார்வை : 58

மேலே