31 கடவுளை அகத்தில் காண்பதே காட்சி - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 15
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
பொங்கலை ஆழி தாண்டிப்
..பொருப்புகள் கடந்தோ யாமல்
அங்குமிங் குந்தி ரிந்தே
..அழிந்துபோ முடலைக் காப்பாய்
எங்கணு முள்ளோன் றாளுன்
..இருக்கையி னிருந்து போற்றிப்
பங்கமில் சுகம்பெற் றுய்யப்
..பாரமென் பகராய் நெஞ்சே. 15
- தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”மலர்ச்சியுடைய, வாழ்வின் கட்டிளம் பருவத்தை, கடலைத் தாண்டியும், மலைகளைக் கடந்தும் ஓய்வில்லாமல் அங்குமிங்கும் என்று எங்கும் திரிந்து அழிந்து போகும் உடலைக் காக்கின்றாய்.
எங்கும் உள்ள இறைவனின் அடிகளை நீ இருக்கும் இடத்திலிருந்து போற்றித் தொழுது குறையில்லாத சுகம் பெற்று உயிர் வாழ்வதில் சிரமம் என்ன என்று சொல்வாய் நெஞ்சே!” என்கிறார் இப்பாடலாசிரியர்.
பொங்கல் – மலர்ச்சியுடைய, வாழ்வின் கட்டிளம் பருவம்