உழவனின் உழச்சல்

“ உழவனின் உழச்சல்”

முப்போகம் என சொன்னானே
முப்போகம் என சொன்னானே

முப்போகம் வேனும்முனா
கொங்க மழை, கோடை மழை
ஆடி மழை அடமழை
எந்த மழையும் காணலையே !!

மழைவந்தா போக தடமில்ல,
களைவந்தா புடுங்க ஆளுமில்லை,
கழனிபுக யாரு இருக்கா,
கனினி மையம் ஆனதாலே.

கனவு தேசம் உருவாக்க
கழனியெல்லாம் பட்டாச்சு,
உரம் விற்க வந்தவுங்க,
விதை மாற்றம் செய்தாங்க,


விளஞ்ச சாமன் விலையில்ல,
தரகு கொடுத்து மாளலையே,
வந்தகாசு கூலிதர பத்தலையே,
வவுறு மட்டும் காய்யுதுவே.


முதுகெலும்பு என சொன்னாங்க
பின்னஉள்ள எழும்புதானே என,
கண்ணு ஏனோ காணலையோ,
கண்ணு ஏனோ காணலையோ.

உங்கள்
தௌபீஃக்

எழுதியவர் : தௌபீஃக் (8-May-20, 1:16 am)
சேர்த்தது : ஷிபாதௌபீஃக்
பார்வை : 823

மேலே