கட்டுண்டுகிடக்கும் ஆறறிவு மனிதன்
பறவைகளும் விலங்கினங்களும் இன்று மாசிலா
பூமியில் கொஞ்சிக் குலாவி உலாவுகின்றன
தோகை விரித்து வீதியில் மயிலினங்கள்
மாசு குறைந்த ஏரியில் சிவந்த கால்
கொக்கு கூட்டம் என்றுமிலாது இன்று
வெளிநாட்டிலிருந்து வந்த வண்ணம் மனிதனோ
தானே ஏற்படுத்திக்கொள்ளும் விஞான
விபரீத்ததால் கொரோனா தாக்குதலால் கட்டுண்டு
வீட்டிலேயே அடைபட்டுக்கிடக்க இந்த பறவை
விலங்கினங்கள் சுதந்திரமாய் உலாவி வருதல்
கண்ணை உறுத்துகிறதோ மனிதனுக்கு இல்லை
ஐந்தறிவு ஆறறிவைப் பார்த்து கொக்கரிப்பதுபோல்
அவன் மனதில் காட்சி தெரிகிறதோ ....
இன்னும் எத்தனை நாள் இந்த
அவல நிலை மனிதனுக்கு