அன்பிலா அழகி
அழகியே நீ பேரழகிதான் உன்னழகை
ரசித்த நான் உன்னோடு நட்பில் இணைய
ரோசாச்செண்டு ஒன்றை தூதாய் அனுப்ப
அதை நீயோ கசக்கி மிதித்தாய்
அழகின் ஆணவமோ இது நானறியேன்
ஆனால் அது என்னுளத்தை உறையவைக்க
உன்னழகிய விரல்களின் கூறிய நகம்
பார்த்தேன் நித்தம் நித்தம் வளருதே
உன்கைவிரல் நகங்கள் உன்னுள்ளத்தில்
எனக்கேன் ஒருதுளி அன்பு சுரக்கலையோ
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
