ஒருசான் வயிறு
ஒருசான் வயிறு
கொரானாவுக் கூரடங்கப் போதுமா பாவிகள்
ஒருவன் கேட்கிறான் ஊரடங்கப் போதுமா ?
பதுங்கி அடங்கிடப் போதுமா ? அவரின்
பசியை போக்குவதார் ? என்று கேட்டானே
காடாயின் வேட்டையாடு வேண்டிய தைத்தின்னு
நாடாயின் ஓசியரி சிபருப்பும் போதாவோ
கேப்பையில் நெய்வழியு மாக்கேள டாக்கண்ணா
கேடுகெட்ட உன்னைவைத்தா இந்நாடு உருப்படும்
கேடுகெட்ட வனேநீகேள் சாராய
கேட்டையும் மதுபாட்டில் செய்தவனைக் கேளேநீ
ஒரேநாளில் நூற்றி யெழுபது கோடிக்கு
ஓடியோடி வாங்க பாட்டிலுக்கு ஏதுபணம
அரசாட்சி யாநடத்தி முடித்தார்
அரசுசெய்தும் பாட்டிலையும் செய்து விற்றாரே
கோடிகோடி மக்களுக்கு கோடிகோடி பிரச்சனை
மீடியாவை வைத்து கவிழ்கவா முடியும்
ஓடியாடி தீர்க்கவா அரசு ?
ஒருசான் வயிற்கழுவான் யாரவன் பேடிதானே
சொல்பவனுக் கென்ன எளிதாய் சொல்கிறான்
காமிராக்கை யிலிருக்க படமெதையும் போடுறான்
ஆளாளில் சொல்பவன் அதிகம் செய்வதுயார் ?
அருளிலார்க் கவ்வுலகம் இல்லை அருமைதானே ?
பொருளிலார்க் கிவ்வுலகம் இல்லை பெருமைதானே ?
சேமிக்கத் தெரியானும் சேர்தியா ? மனிதனில்
பாட்டிலுக்கு பணமிருக்கும் அவனுக்கு
தான்குடிக்கும் கூழுக்கு வக்கில்லை உண்மையாமோ?