உப்பு
முத்தும் பவளமும் விளைவது ஆழ்கடலில்
அலைகடல் முழுவதும் உப்பு கரிக்க
உப்பு விளைவது கடலில்தான் -விலையில்
முத்தும் பவளமும் தங்கத்துக்கு நிகர்
உயிர்தரும் உப்போ கிலோ இருபதேரூபாய்
முத்தும் பவளமும் இல்லாது வாழ்ந்திடலாம்
உப்பிலாது இயலாதே வாழ்வு