மருத்துவ வெண்பா – தென்னம்பூ - பாடல் 60

நேரிசை வெண்பா

மேகம் அகக்கொதிப்பு வீறும் இரத்தபித்தம்
வேக வசிர்க்கரநோய் வீழ்பிரமி – தேகத்தில்
வின்னம்பா லிக்கும் விடபாகம் போகவென்றாற்
தென்னம்பா ளைப்பூவைத் தின். 60

- குண பாடம்

குணம்:

தெங்கின் இளம்பாளைப் பூவால் பிரமேகம், உட்காய்ச்சல், இரத்தபித்தம், அசிர்க்கரம், ஒழுக்குப் பிரமியம், விடபாக நோய் இவைகள் நீங்கும்.

உபயோகிக்கும் முறை:

இளசான தென்னம்பூவின் மேலுள்ள பாளையை நீக்கி உள்ளிருக்கும் பூவைப் பூணில்லாத உலக்கையால் இடித்துப் பிழிந்தெடுத்த சாற்றை அரை அவுன்ஸ் வீதம் தினம் 3 வேளை சம அளவு நீரில் விளாவிக் கொடுத்துவரப் பெரும்பாடு, வெள்ளை முதலிய நோய்கள் தீரும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-May-20, 5:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 60

சிறந்த கட்டுரைகள்

மேலே