218 கொலை ஒறுப்புச் செய்யுரிமை மன்னர்க்கே கொள்வர் – கொலை 5

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

கொலைபுரி வோரையுங் குடிவ ருந்தவே
அலைவுசெய் பவரையும் ஆவி நீக்கிடத்
தலைமுடி தரித்தவர் தமக்கு நீதியாம்
இலைகொலை செயுமுறை யிதர ரார்க்குமே. 5

– கொலை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”கொலை செய்வோரையும், பிறர் குடும்பம் வருந்த பெருந்துன்பம் செய்வோரையும் உயிரை நீக்கிடும் உரிமை மணிமுடி தாங்கிய வேந்தர்க்கே, (அரசாங்க நீதிமன்ற நீதிபதிகளின்) நீதிமுறை யாகும். மற்ற யார்க்கும் உயிர்க்கொலை செய்யும் உரிமை யில்லை” என்கிறார் இப்பாடலாசிரியர்.

அலைவு - துன்பம். ஆவி - உயிர். நீதி - முறைமை. இதரர் - மற்றவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-May-20, 3:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே