உண்டோக் குரங் கேற்காக் கொம்பு
குலோத்துங்கச் சோழன் தனக் கேற்பட்ட மனசங்கடத்தால் கம்பனை சோழ நாட்டை
வீட்டு வெளியேறும்படிச் சொன்னான். கம்பனும் வீராப்பாக அரைப்பணமும் செலவுக்கு
எடுத்துக்கொள்ளாமல் தான் கட்டியக் கோவணத்துடன் செல்லும்போது குலோத்தங்
கனிடம் தான் திரும்ப சோழநாடு வந்தால் ராஜ அலங்காரத்துடன் மாபெரும் மன்னனை
தனக்கு வெற்றிலை மடித்துக்கொடுக்கும் அடைப்பக்காரனாக அமர்த்தி வருவதாக சொல்லி
சோனாட்டை விட்டு வெளியேறினான்.
மேலும் தேன் சொரியும் கொல்லி மலையை உடைய மன்னன் நீர். ஒருவர்தான்
புலவர்களை மரியாதையாய் நடத்துபவரில்லை சேரன் இருக்கிறான் பாண்டியன்
இருக்கிறான். 24 காத அகல நீளமுள்ள ( சுமார்1000 சதுர கிலோமீட்டர்). உன்னுடைய
காட்டைத்தவிற மற்ற நாடு மலைகளெல்லா. வற்றையும் கடல் கோள் வந்து விழுங்கி
விட் டதா ? உன்னை விட்டால் எங்களைப்போன்ற புலவர்களுக்கு வேறு புகலிடம்
கிடையாதா என்று சொல்லி கீழ்க்கண்ட பாடலைப்பாடினார்
வெண்பா
காத மிருபத்து நான்கொழியக் காசினியை
ஓதக் கடல்கொண் டொளித்ததோ --- மேதினியில்
கொல்லிமலைத் தேன்சொரியுங் கொற்றவா நீமுநிந்தால்
இல்லையோ வெங்கட் கிடம். (கவிச்சக்கரவர்த்தி கம்பர்)
மேலும் கம்பர் பாடியதாவது
வெண்பா
மன்னவனும் நீயோ வளநாடு முன்னதோ
உன்னை யறிந் தோதமிழை யோதினேன். --- என்னை
விரைந் தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ வுண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு. (கவிச்சக்கரவர்த்தி கம்பர்)
மன்னன் நீ ஒருவந்தனா ? உன்னுடைய நாட்டைவிட்டால் வேறு வளமான நாட்டின்
மன்னர்கள் இல்லையா? என்னைக் கண்ட மாத்திரத்தில் ஏற்றுக்கொள்ளாத மன்னர்கள்
இல்லையா? மரத்திலிருக்கும் குரங்குத் தாவிப் பிடிக்காத கிளையும் இருக்கின்றதா?
என்று வினவிக் கம்பரானவர் சோழநாட்டை விட்டு வெளியேறினார்
.