கொரோனாவே
கொம்பு கொண்ட கொரோனாவே
தாகம் உனக்குத் தணியவில்லையா?
தார்மீகக் கடமை முடியவில்லையா?
வேகமாகவே எங்கும் பரவுகின்றாய்
வெகுமதி இன்றியே உலவுகின்றாய்
தூண்டிய சீனாவை விட்டுவிட்டாய்
சும்மா இருந்தோரைப் பிடித்துவிட்டாய்
கடவுச்சீட்டு எதுவும் வாங்கவில்லை
கடல் கடந்தே வந்துவிட்டாய்
நீ தொட்டுக்கெட்டவரும் உண்டு
மீண்டு வெளிவந்தவரும் உண்டு
காலநேரம் பார்த்து கடமை செய்தோரை
கணக்கின்றி சேவை செய்ய வைத்துவிட்டாய்
இஞ்சியை பூண்டை தேடுகின்றார்
விஞ்சியே மஞ்சளையுமே தேடுகின்றார்
வேப்பிலைக்கு வந்தது யோகம் உன்னால்
பெருங்காயத்துக்கும் வந்தது வரவேற்பு உன்னால்
வெளி உலகமோ தெரியவில்லை
விரும்பாமலே சிறை இருக்கின்றோம்
கருணை உனக்கு வரும்வரை
ஏக்கத்தோடே கதவருகே காத்திருப்போம்
நீ தொட்டவர்கள் சொன்னதுண்டு
சுவை மறந்து போகிறதாம்
தொண்டை வறண்டு போகிறதாம்
சளியோடு இருமலும் சன்னதம் ஆடுகிறதாம்
தாராள குணசீலன் உன் கடமை
உணர்வுக்கு ஒரு அளவே கிடையாதா
கொம்பு கொண்ட கொரோனாவே
வம்பு வேண்டாம் வந்த வழியே ஓடிவிடு