காதல்

காதல் அன்பின் பரிமாற்றம்
ஒரு பெண் தான் விரும்பும்
ஆண்மீது செலுத்துவதும் காதல்
தாய் சேயின் மீது காட்டுவதும் காதல்
இரு நண்பர்களிடையே ஏற்படும்
அன்பு பரிவர்தனையும் காதல்

இது இப்படி இருக்க
சில இறை அடியார்கள்
தம்மையே நாயகியாக பாவித்து
இறைவனை நாயகனாக பாவித்து
காதல் பரிவர்த்தனை செய்ததுமுண்டு
நம்மாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும்

திருமாலை நாயகனாய் ஏற்று
காதல் பொழிந்தனர் பிரபந்த பாடல்களை
பாவையர் ஆண்டாளும் மீராவும்
கண்ணனுக்கே தம் உடல் பொருள் ஆவி
அளித்து இறைவனோடு ஒன்றினர் காதலில்
இந்த காதல் யாவும் களங்கமற்ற
தூய அன்பின் பரிணாம தோற்றங்கள்
அதில் மோகம் போகம் கலப்பதில்லை
களங்கம் ஏதுமில்லை அன்பின் உரு
இந்த காதல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-May-20, 11:47 am)
Tanglish : kaadhal
பார்வை : 171

மேலே