காதல் ♥️
காதல் ♥️
'மின்னல்' பார்வை
மனதில் இடியன இறங்கியதால்
'காதல்' இதயத்தில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொள்ள
அது கடும் காதல் புயலாக உருவெடுத்து
இருவர் மனதிலும் சூறைக்காற்றாவக பயணித்து
மிக கனத்த காதல் மழையாக கொட்டி தீர்த்தது.
ஒட்டு மொத்த அழகையும் தன் வசம் வைத்திருக்கும்
தேவதை கூட்டத்து தலைவியே.
வானத்தில் இருந்து உதிர்ந்த பேரதிசயமே
அலங்கார தேர் என பவனி வரும் கலை ஓவியமே
காணல் நீர் என இடை கொண்டு
மது குடுங்களை சுமந்து வரும் இந்திரலோகத்து சுந்தரியே
முக்கனி சுவையை மிஞ்சும் அமுதை இதழில் தேக்கி வைத்திருக்கும் இன்ப சுரங்கமே...
இராஜராஜசோழன் வழி வந்த வீரனே
இராசேந்திர சோழன் வழி வந்த மண்ணாதி மண்ணனே
கம்பன் எழுத்தானி வைத்து கவிதை எழுதுவனே
இளங்கோவன் ரசனையில் மிதப்பவனே
பாரி வள்ளல் என இறக்கம் கொண்டவனே
தஞ்சை கோபுரம் என சிந்தனை செய்பளே
என் அரண்மனையை அழகு படுத்த போகும்
என் இதய ராணியே
வில்லெடுத்து வந்த என்னை
உன் வேல் விழியால் மயக்கி
அம்பு பார்வையால் இதயத்தை தாக்கி
என் வில்லுக்கு வேலை வைக்காமல்
என்னை காதல் எனும் கடலில் மூழ்கடித்து மகோன்னதனமே.
மண்ணவனே!
விரைவில் வந்து சிறையேடு.
விரைந்து வந்து மாலையிடு.
அடக்க முடியாத ஆசை
அலைபாயுது.
தேக்கி வைத்த ஆசைகள் ஏங்கி தவிக்குது.
உன் தோள் சாய உள்ளம் ஏங்குது.
உன்னை கட்டி அனைக்க மனம் ஆசைபடுது.
- பாலு