வாழப் பழகிக்கிலாம்னு
எங்கடா தம்பி போயிருந்த? பழையபடி ஊரு சுத்த ஆரம்பிச்சிட்டியா?
@@@@@
போக்கா. கொரோனாவோட வாழப் பழகிக்கணும்னு தாத்தா சொன்னாரு. முககவசம் இல்லாம வெளில போனேன். கவலர்கள் சட்டைப் பையில (பாக்கெட்) நான் வச்சிருந்த நூறு ரூபாயை அபராதமா புடுங்கீட்டு செம்மையா அடிகுடுத்து வீட்டுக்கு போகச் சொல்லீட்டாங்க.
@@@@@@
நீ நொண்டிட்டு வரறபோதே தெரியும்டா.
@@@@@@
நூறு ரூபாய் அபராதம் எதுக்குடா போட்டாங்க?
@@@@@@
முகக்கவசம் போடாம போனதுக்கு.
@@@@@@
சொல்லுப்பேச்சைக் கேட்டத்தானே. உன்னை மாதிரி ஊரு சுத்திப் பயல்களை காலு கையை முறிச்சு நேரா மருத்துவமனையில போடணும்டா. அப்பத்தான்டா திருந்துவீங்க.
@@@@
அடி பட்ட இடம் வலிக்குதுக்கா. வீங்கிப் போச்சு. ஒத்தடம் குடுக்கா.
@@@@@
இரு. பாட்டிகிட்டச் சொல்லி வீக்கத்துமேல சூடு வைக்கச் சொல்லறேன்.
@@@@@
அய்யோ அக்கா..வேண்டாம் அக்கா. எனக்கு அதுவா சரியாகிடும்.