பள்ளிக்கூடம்
பள்ளிக்கூடம்
பள்ளிக்கூடம் என்றாலே
அடிவயிற்றில் புளிக்கரைக்கும்
அசந்துதூங்கவே மனம் துடிக்கும்
அழகான கனவும் பிறக்கும்
ஏழு மணி ஆகுதென்றால்
எமனே முன்னால் வந்ததாக
ஏதேதோ! ஞாபகம் வரும்
எழுப்பிவைப்பது அம்மா தான்
இட்லியோ! தோசையோ!
இடியாப்பமோ! புட்டோ!
ஆப்பமோ! உப்புமாவோ!
சப்பென்றுதான் இருக்கும்
மொத்த சந்தோஷமும் பறக்கும்
தேகம் எங்கும் பயமே பிறக்கும்
கடாவெட்டில் நிற்கும் ஆடாக
கதிகலங்கியே அங்கு போவோம்
சில ஆசிரியர்களைப் பார்த்தாலே
படுத்து தூங்கவே தோணும்
ஆங்கிலமும் கணக்குமோ
ஆல கண்ட விஷம் ஆகும்
தமிழ் மொழிப் பாடம் என்றால்
சங்கீதமோ நாவில் வரும்
நேரம் போவதே தெரியாது
கணப்பொழுதில் ஓடிவிடும்
இரண்டு மணி ஆவதெப்போ...
திரும்பி வீட்டுக்குப் போவதெப்போ...
விட்டால் போதுமடா என்று
திரும்பிப் பார்க்காமலே ஓடியவள்
எத்தனை பேருக்கு இந்த அனுபவம்
இருந்தால் எனக்கு சொல்லுங்களே
இழந்த அந்த வாழ்க்கையை
ஈடு செய்ய ஏதும் வழி உண்டா?