காவிய தேவதைகள் யில்லை

காவிய தேவதைகள் யில்லை!

மண்மாந்தர் வந்தார் கடவுளின் காதலால்
பின்மாந்தர் காதலுக்கு யார்தேவன் -- மன்மதன்
நம்போல் கிரேக்கரின் காதலுக்கு அம்மைவீனஸ்
நம்கிருத்வர்க் இஃதிலை சொல்

மில்டன் இழந்தசொர்கம் நூலவமை சொல்லெல்லாம்
நல்கிரேக்க ரோமயெகிப் தின்கதை---. பல்கி
கிருத்துவர் ஏற்றார் கிருத்துவத்தில் யேது
அருந்தேவ தைகள் பெயர்

எழுதியவர் : (29-May-20, 9:04 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 65

மேலே