காதல் வலி 81
உலகிலேயே சிறந்த பூ
அது அவளின் சிரிப்பு
பிரபஞ்சம் அந்த
அந்தியில்
மஞ்சள் நிறமானது
அன்று
அவளுக்கு
மஞ்சள் நீராட்டுவிழா
அவள் ஆண்களின்
ஆனந்தத்தில்
தீ வைக்கும் ஆனந்தி
மதுக்கடைகளை
அரசு திறக்க சொன்னதும்
அவள் வீட்டுக் கதவுகள்
திறந்தன
அங்கே ஒயின் இல்லை
மாறாய்
குயின் இருந்தது
அவளின் தந்தையை
கைது செய்யாத
அரசை வன்மையாக கண்டிக்கிறேன்
அழகுப் புதையலை
தன் வசம் வைத்திருப்பதால்
சந்திராயன்
நிலவில் இல்லாது
அவள் நிழலில்தான்
தரையிறங்கி இருக்கும்
அன்று முதல்
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை
கைவிட்டேன்
இந்தியனாக மாறினேன்
அவளின்
பெயர் இந்திராணி
என அறிந்ததும்
அவள் கூந்தலில்
அமரும்போது மட்டும்
பூக்களுக்கு அன்று விடுமுறை
அவளும் அவலும்
ஒன்றுதான்
சமூகத்தில் நசுக்கப்படுவதால்