கம்ப்யூட்டர் ஜோக்ஸ்

வீட்டுக்கார அம்மா: போன மாசம் நீ சொல்லாம கொள்ளாம அஞ்சு நாள் வரலை.

வீட்டு வேலைக்காரி: நீங்க தப்பாச் சொல்றீங்க. நான் என் பையனோடே லாப்டாப்புலே எல்லாத்தையும் ரிகார்ட் பண்ணி வெச்சிருக்கேன். கரெக்டா நான் நாள் தான் வரலை.அதுவும் சொல்லாம கொள்ளாம இல்லை. உங்களுக்கு வாட்ஸப் மெச
ஸேஜ் அனுப்பி இருந்தேனே பாக்கலையா?
********************
மாமி நான் எம் பொண்ணுக்கான ஜாதகத்தைப் பார்த்துண்டு இருந்தப்போ எங்காத்து கம்ப்யூட்டர் crash ஆயிடுத்து. ஒரு மணி நேரம் உங்க laptop ஐக் கொடுத்தேள்னா நான் அந்த ஜாதகங்களைப் பார்த்துட்டு உடனே திருப்பித்தந்துடறேன்.
********************
அப்பா, பாருங்க அப்பா பாட்டியை. நான் விளையாடறதுக்குக் கேட்டா, பாட்டி அந்த ஐபேடை எனக்குத் தரமாட்டேங்கறா அப்பா. பாட்டியே அதுலே ரெண்டு மணி நேரமா கேம்ஸ் விளையாடிண்டு இருக்கா அப்பா. எனக்கு அதை பாட்டி கிட்டே இருந்து வாங்கிக் கொடுங்கப்பா.

கம்ப்யூட்டர்லே பாட்டி அப்படி என்னதான் விளையாடறா?

ஃப்ரீசெல், ஸாலிடேர், ஸ்பைடர், சுடோகு எல்லாம் ஆடிட்டு இருக்கா அப்பா.
********************
பாட்டி: கண்ணே தெரிய மாட்டேங்கறதுடா. என் சிநேகிதி கோமளம் எனக்கு ஈ மெயில் அனுப்பியிருக்காளாம். ஃபோன்லே சொன்னா. அதை கம்ப்யூட்டர்லே பாத்து படிச்சி கொஞ்சம் சொல்லுடா.
********************
வீட்டுக்கார அம்மா: புதுசா 3D TV வந்திருக்குன்னு சொன்னாங்களே. அது எங்கே கிடைக்கும்னு தெரியல்லியே?

வீட்டு வேலைக்காரி: கூகிள்லே பார் அம்மா. நீ கேக்கற விவரம் எல்லாம் அதுலே கெடைக்கும்.
********************
கம்ப்யூட்டர் வேலை செய்யல்லையேடா.

சர்வர் பிராப்ளம் பாட்டி.

அடடா. அப்படின்னா அவனை உடனே நல்ல டாக்டர்கிட்டே கூட்டிகிட்டு போக வேண்டியது தானே.
********************
அரசர்: மந்திரியாரே, என்னோட இ மெயிலைத் திறக்க முடியவில்லை.

மந்திரி: ஏன் அரசே?

அரசர்: பாஸ்வேர்ட் மறந்து போய்விட்டது .

மந்திரி: பாஸ்வேர்ட் உங்கள் மனைவி பெயரைத்தானே வைத்ததாகச் சொன்னீர்கள் அரசே.

அரசர்: ஆம். ஆனால் எந்த மனைவி என்பதை மறந்துவிட்டேன்.

மந்திரி: (மனதிற்குள்) நாளுக்கு ஒரு திருமணம் செய்து கொண்டால் இப்படித்தான்.
********************

எழுதியவர் : ரா.குருசுவாமி ( ராகு) (31-May-20, 12:49 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
Tanglish : computer jokes
பார்வை : 33

மேலே