பொக்கிஷம்

பொக்கிஷம்

நட்சத்திர வடிவம் கொண்டு
நடுவே சிவப்புக்கல் பதித்த
அழகான ஒரு ஜோடித் தோடுகள்
பன்னிரெண்டு வயதில் என் தந்தை
எனக்களித்த உன்னத அன்பின்
உயரிய வெளிப்பாடுகள்

தோட்டை போட்டுக்கொள்ளும்
அளவுக்கோ என் காதுகள் இல்லை
காதிலும் பெரிதாக தோடுகள் இருந்தன
காலம் வரும்போது போடலாமென்று
எல்லோரும் சொல்ல பாத்திரமாகவே
பெட்டியிலே வைத்து விட்டோம்

விசேஷமான ஒரு நாளில் என்
காதிலே தோடுகள் அரங்கேறின
எண்பது ருபாய் பவுனிலே செய்த
தோடு என்று என் தந்தை அடிக்கடி
சொல்வதுண்டு அவர் சொல்லின் நினைவாக
இன்றும் என்னோடு வைத்திருக்கிறேன்

தோட்டுக்கு வயது நாற்பத்தியொன்பது
இன்னும் என் காதிலே தான் இருக்கிறது
இடையில் எத்தனையோ தோடுகள்
ஆயினும் இது போல் பொக்கிஷமாய்
எதுவுமே எனக்குத் தோன்றவில்லை
இது தோடல்ல என் தந்தையின் மனசு

பழைய தோடுதான் ஆனாலும்
எனக்கோ புதியதாகவே என்றும் தெரிகிறது
தாயுமானவன் என் தந்தை அளித்த
விலை மதிக்கமுடியாத பரிசு இது
நட்சத்திர தோடுகள் என் முன்
கண்ணைச் சிமிட்டி சிரிக்கின்றன...

எழுதியவர் : Ranjeni K (31-May-20, 3:36 pm)
சேர்த்தது : Ranjeni K
Tanglish : pokkisham
பார்வை : 188

மேலே