271 கீழோர் தம்பழியைப் பிறர்மேல் சாற்றுவர் - பெரியோரைத் தூறல் 5

தரவு கொச்சகக் கலிப்பா

கஞ்சனத்தில் தம்முகமே காணுவது போற்கயவர்
தஞ்செயிரைப் பிறர்செயிர்போல் தாமெண்ணித் தூறுவாரோர்
வஞ்சகனை நம்பியொரு மாசிலான் இன்னலொடும்
எஞ்சலுறா வண்ணமவன் இழிவுரைத்தன் முறையாமே 5

- பெரியோரைத் தூறல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”கீழ்மையான குணமுடையவர்கள் கண்ணாடியில் தம் முகத்தைக் காண்பது போல், தங்களிடமுள்ள குறைகளை மற்றவர்கள் செய்தது போல அவர்கள் மேல் சுமத்திப் பழிப்பார்கள். ஒரு வஞ்சகனை நம்பும் ஒரு குற்றமற்றவன் அவனால் துன்பமும், அவமானமும் அடையாதபடி அவனது தவறை எடுத்துச் சொல்வது தனக்கு முறையாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

கஞ்சனம் - கண்ணாடி. செயிர் - குற்றம். எஞ்சல் – அவமானம்,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-May-20, 8:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே