கொடுத்து உயர்
ஏடெடுத்து நீபடித்துப் பாரு – உனை
ஏறெடுத்துப் பார்க்குமிந்த ஊரு – புகழ்
ஏணியிலே ஏற்றிவைத்து மாநிலமே கொண்டாட
ஏற்று - கொடி - நாட்டு
**
மாடியிலே வாழ்ந்துவிட வென்று – சிலர்
மமதையில் படிப்பது உண்டு – அவர்
மனம்போன்று செல்லாமல் தினமேழை படும்பாட்டை
மாற்று – மெரு கேற்று
**
மண்குடிசை வாழுகின்ற மக்கள் – வரும்
மழைகால கொள்ளுகின்ற சிக்கல் – இனி
மறைந்தோடும் நிலைக்கான நிறைவான வழிகாட்டு
மக்கும் – அவர் - துக்கம்
**
வாழ்க்கையெனும் புத்தகத்தை எடுத்து – ஒரு
வழியற்றுக் கிடப்போரைப் படித்து – புது
வழிகாட்டும் முனைப்போடு விழிசிந்தும் துளிநீரை
விடுத்து உயர் கொடுத்து
**