உன்னில் நானும் என்னில் நீயும்
உன்னில் நானும்.....
என்னில் நீயுமாய் ......
இதயத்தின்
பின்னே
நம்
காதல்
கண்ணாமூச்சி ஆட.....
இருவிழியின்
சந்திப்பில்
பொல்லாத
ஊடல் வந்து
குடியேற......
உதடுகள் சொல்ல துடித்த
வார்த்தைகள் யாவும்
ஊமையாகிட....
யார் தான் சொல்வதென...
மௌனமாய் நின்ற
நொடியில்...!!!
என்
விழியோர கன்னத்தில்....!!!!
உன் விரல் நுனி
ஸ்பரிசத்தில்....!!!!
உணர்ந்தேன்
உயிரே...!!
இனி நம்
காதல் சொல்ல
வார்த்தை ஏதும்
தேவையில்லை ......!!!!!