கொடுங்கள்
காட்டுங்கள்....
முரடர்களிடம்
அன்பைக் காட்டுங்கள்...
இரக்கமற்றவர்களிடம்
கருணையை காட்டுங்கள்
பணத்தாசை பிடித்தவர்களிடம்
பாசத்தை காட்டுங்கள்
பிடிவாதம் பிடிப்பவர்களிடம்
விட்டுக் கொடுங்கள்
மதிக்காதவர்களிடம்
மரியாதை காட்டுங்கள்......
பதட்டப்படுவோரிடம்
நிதானத்தைக் காட்டுங்கள்
கோபப்படுபவர்களிடம்
குணத்தை காட்டுங்கள்
ஏனெனில் ...
தெரியாத ஒருவருக்கு காட்டுவதும் .....
இல்லாத ஒருவருக்கும்
கொடுப்பது தானே
உயர்ந்த செயலாகும்....!!!
கவிதை ரசிகன்
சங்ககிரி