உன்னழகு
புறத்தில் வடிவழகியாய்
உன்னைக் காணும் நான்
என்னுள்ளத்தில், அகத்தில்
அழியா உன் காதலெனும்
வடிவழகைத்தான் நான்
என்றும் காண விரும்புகின்றேனடி
கண்ணம்மா எந்தன் கண்ணம்மா