303 விலங்கோடு அறிவில்லா சிறார் பித்தர் கிழவர் வெகுள்வர் - சினம் 9

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

தெருளுறு விலங்கி னுக்கும்
..தெளிவறி யாச்சி றார்க்கும்
மருளுறு பித்த ருக்கும்
..மடவிருத் தருக்கும் கோபம்
பொருளலால் அயலோர்க் கில்லை
..புகன்றவிந் நால்வ ரேயோ
அருளுறு சினமீக் கொள்வார்
..அனையருள் ஒருவ ரேயோ. 9

- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”மிரட்சியுடைய விலங்குகளும் தெளிந்த அறிவற்ற சிறு குழந்தைகளும், மயக்கமுடைய பித்தரும், அறிவற்ற முதியோரும் கோபம் கொள்வது இயல்பு. மற்றையோர் கோபம் கொள்ள அவசியமில்லை.

நற்குணமுடைய மற்றையோர் அவ்வாறு கோபம் கொள்வாரானால், அவர் மேற்சொல்லப்பட்ட நால்வரோ அல்லது நால்வருள் ஒருவரோ?” என்று கேட்கிறார் இப்பாடலாசிரியர்.

தெருள் - மிரட்சி. மருள் - மயக்கம்.
மடம் - அறியாமை. விருத்தர் - முதியோர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jun-20, 7:37 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

சிறந்த கட்டுரைகள்

மேலே