59 ஆசான் அரும்புகழ் அளவிடற்கு அரியது - ஞானாசிரியன் பெருமை 6

கலி விருத்தம்

ஐம்புலக் கதவடைத்து மனமாவை அறிவாங்
கம்பம்வீக் கியஞருஞ் சுகமெனக் கருதியே
செம்பொனைத் திரணமா மதித்திடத் தகுதியோர்
தம்பெரும் புகழியம் புதற்குந் தரமதோ. 6

- ஞானாசிரியன் பெருமை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

“மெய் வாய் கண் மூக்குச் செவியெனும் ஐம்புல ஆசையை அகற்றி, மனமாகிய விலங்கை அறிவுத் தூணில் கட்டி, துன்பத்தையும் இன்பமாகக் கருதிப் செம்மையான பொன்னைத் துரும்பு என மதித்து நடக்கும் பெரியோர்களின் பெரும்புகழைச் சொல்லி முடியுமா! சொல்ல முடியாது” என்கிறார் இப்பாடலாசிரியர்.

கம்பம் - தூண். வீக்கல் - கட்டல். அஞர் - துன்பம். திரணம் - துரும்பு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jun-20, 4:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே