58 தெய்வ நூல் ஓதுவோன் சிறந்த மெய் ஆசான் - ஞானாசிரியன் பெருமை 5

கலி விருத்தம்

மண்ணிறைக் கடியரா யுயிர்வளர்ப்பர் பலரும்
விண்ணிறைக் கடியரா யெவரு‘ம்’வீடு பெறவே
புண்ணியத் திருமறைப் பொருளையோது புனிதர்
எண்ணிடற் கரியபெற்றி யையியம்ப லெளிதே. 5

- ஞானாசிரியன் பெருமை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”உலகத்தார் பலரும் மண்ணரசர்க்கு அடிமையாய் இருந்து உயிர் வாழ்வார்கள். கடவுளுக்கு அடியவராய் மெய்யுணர்ந்தார் எல்லாரும் கடவுளின்பம் பெறும் பொருட்டு புண்ணியம் அருளும் தூய மறைப்பொருளை ஓதுவர். அதனால் அவர்கள் அடையும் அளவிட முடியாத பெருமையைச் சொல்வது எளிதாகும்” என்றும், மெய்ப்பொருள் தரும் நூல்களை ஓதுபவன் சிறந்த ஆசான் என்றும் சொல்கிறார் இப்பாடலாசிரியர்.

விண்ணிறை - கடவுள். வீடு - கடவுளின்பம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jun-20, 4:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே