கவிதையில் ஒரு கதை
குனிந்து முதுகுடன்
குப்புற கவிழ்ந்தே
இருந்த பச்சை புற்களை
பரிகாசத்துடன் பக்கத்தில் நின்றிருந்த
மரம் சொன்னது
நீ எப்பொழுதும்
குனிந்தே இருக்கிறாய்
என்னை பார்
எத்தனை உயரம்
வலிமையில் எஃகு
போல்
நாட்கள் கடக்க
ஒரு நாள்
பெருகி வந்த
மழை வெள்ளம்
தன் வலிமை
உடலால் தடுத்து
நிறுத்த முயற்சித்த
பெரு மரம்
அடியோடு பெயர்க்கப்பட்டு
முதுகு குனிந்த புல்லின்
மேல் அடித்து சென்றது
அவ் வெள்ளம்