💕 அண்ணன் உறவு 💕
💕 அண்ணன் உறவு 💕
***
ஒரு கருவறையில் பிறந்து - இரண்டாய்
பிரிந்த உறவுகள் நாங்கள் - அவன்
உண்ட மீதம் உண்ட எனக்கு - எல்லை
அற்ற பாசம் கொடுத்தான்
நான் பயந்து நின்ற போது பரிவோடு
தட்டிக் கொடுத்தான்
நான் வீழ்ந்தெழும் போது
வலிமை கொடுத்தான்
நான் தோல்வி அடைந்த போது
தோழனாய் தோல் கொடுத்தான்
நான் தயங்கி நின்ற போது தந்தையாய்
அறிவுரை கொடுத்தான்
நான் அவ்வமானப்படும் போது
அன்போடு அரவணைத்தான்
நான் தனிமையில் நின்ற போது அன்னையாய்
ஆறுதல் கொடுத்தான்
பல உறவுகள் இருந்தாலும் - அவன் இருந்த
கருவறையில் இருந்து வந்த எனக்கு
அவனே முதல் உறவு ...