சுகமா, பாரமா

களங்கமற்ற உள்ளம்
கலக்கம் கொள்ள காரணம்
ஏதேதோ மகிழ்வான நினைப்பு
அன்று அது சுகமே சுகம்
எங்கிருந்தோ வந்து குதித்த
உள்ளத்தில் சுகமான சுமையிது
தெரியாமல் ஏற்று விட்டாள்
பிஞ்சு மனதில்பற்றிக் கொண்டசுகம்
தீயாய் பரவும் இந்த உன்னத நிலை
உள்ளமெல்லாம் கொள்ளையிட்டது
உணரும்போது மீண்டுவர முடியவில்லை
இதயத்துடன் ஒட்டிய இந்த காதல்
நாளும் பொழுதும் பூத்துக் குலுங்கியது
உதட்டுக்குள் புன்னகை
கண்களில் காதல் பார்வை
ஆட்டிப் படைக்கும் ஒரு புதுவித பாசம்
அவன் பார்த்த ஒருவித பார்வைக்குள்
பதுங்கி கிடந்த இந்தக் காதல்
இது முதல் அவள் மனம் சுகமா/ பாரமா /

எழுதியவர் : பாத்திமாமலர் (10-Jun-20, 11:19 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 137

மேலே