விலங்கு
ஏம்பா எஞ்சாமி...
படிச்சி முடிச்சிபுட்டு
பட்டுனு பொளச்சுடுவ...
குத்தவச்ச பொண்ணுரெண்ட
கட்டிக்கொடுத்து முடிச்சுடுவ...
பணம் பண்ணுற வழியெல்லாம்
கரைச்சி குடிச்சுடுவ...
என்கண்ணு மூடுமுன்னே
கரவந்து சேர்ந்துடுவனு
நாளும் நெனச்சி
உழைச்சி கிடந்தேன்...
இப்ப
என் கையு கறியெல்லாம்
உன் கையில சேர்ந்துடுச்சு...
வறுமை விலங்கொன்னு உன்னையும் பூட்டிடுச்சு...