தொலைத்து விட்ட நிகழ்வுகள்

அரைக்கால் சட்டைக்குள்
ஒளித்து வைத்த
அச்சு வெல்லம்

மூக்கில் வெளி
வந்த வெள்ளை
சளியை ஒரே
மூச்சில் உள்ளிழுத்து
குச்சி ஐஸை
நக்கி சுவைத்தது

கனவுகளோடு
கல்லூரிக்குள்
நுழைந்தது

தோளில் கை
போட்டு நடந்து
சென்ற நட்புக்கள்

ஒவ்வொன்றாய்
கடந்து போய்க்
கொண்டே இருக்கிறது

காலங்கள் கடந்தவை களை
திரும்ப கொடுப்பதில்லை

உண்மை புரிய புரிய உள்ளம்
தடுமாறித் தான்
போகிறது

எழுதியவர் : தாமோதரன். (13-Jun-20, 8:53 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 138

மேலே