மெல்லினமே வல்லினமாம்

மெல்லினமே வல்லினமாம்

அதிகாலை பொழுது. பட்டென்று அடிக்கும் அலாரமதை சட்டென்று நிறுத்தி சிறுது கண் மூட முயலும் வேளை. ஐந்தே நிமிடத்திற்குள் மனதில் அலாரத்தின் ஓசை . பாரதியின் குரல் "விசை யுரு பந்தினை போல் உள்ளம் வேண்டும் படி செல்லும் உடல் கேட்டேன்" . அடுத்து ஒவ்வை சண்முகியின் பாடல் "வேல வேல வேல ஆம்பளைக்கும் வேல பொம்பளைக்கும் வேல".
அடுத்து..
"ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே !!" என்று என் மனம் துதி பாட உடல் எழுந்தே விட்டது.
நான் வர்ஷிணி. அலுவலகம் செல்லும் பெண். எல்லோரையும் கிளப்பி நானும் கிளம்பனும். அவரும் எழுந்து விட்டார். எனக்கு நல்ல துணை மட்டுமல்ல. இணையும் கூட . என் சுமைகளை மட்டுமல்ல, வேளை பளுவையும் தாங்கிடஇணைந்தே தோள் கொடுத்திடுவார்.
அத்தைக்கு உடனே "காபி " வேண்டும். வகை வகையான சமையல் வேண்டும். நிறைய சொல்லுவார். கொஞ்சம் மட்டுமே செய்வார். என் நாத்தனார் இறுதி ஆண்டு காலேஜ் செல்லும் பெண். ஏட்டிக்கு போட்டி. விட்டு கொடுத்து போவது என்பதே மருந்துக்கும் இல்லை. திருமணதிற்கு பின் வருமோ? யோசிக்க நேரமே இல்லை. என் மகன் சூர்யா. 9ஆம் வகுப்பு படிக்கிறான். காலையில் 5 மணிக்கே எழுந்து விட்டான் போலும். படிக்கும் சப்தம் கேட்கிறது. மகள் சம்யுக்தா. சமயோஜிதம் தெரிந்தவள். ஆறாம் கிளாஸ் படிக்கிறாள். நிறைய சிந்திக்கிறாள். தேவையான போது நன்கு பேசுவாள். மாமியாரையும் , வேணியையும் அவளால் தான் சமாளிக்க முடியும். சில நேரம் என் மாமியாருக்கே மாமியார் போல ன்னு மாமியார் வாய் மூடிக்கொள்வார்.
ஓகே. இன்றைய நாளுக்குள் போகலாமா ?
குக்கர் விசில் சப்தம் ஒருபுறம். அண்ணி காபி " வேணியின் அலறல்; நான் குளியலறையில். அவர் காபி போட்டு அம்மா மற்றும் வேணி க்கு கொடுத்து விட்டார் போல. சட்டென்று சத்தம் நின்று விட்டது. அவர் காபி கொடுத்திருப்பார். கடவுளே கஷ்டம் னு நினைத்து மனதுக்குள் வேண்டுதல் செய்தால் வந்துட்டேன்னு உடனே வந்து நிற்பார். சங்கரன் என் கணவர். “வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல" என்ற வள்ளுவன் வாக்கு என் கணவன் வழியில் என்னை காக்கிறது. நொடிகள் நிமிடமாக, நிமிடங்கள் மணித்துளிகளாக எல்லோரும் கிளம்பி விட்டோம். அவரவர் கடமை செய்திட. போகும் போது யோசித்தேன் ஏன் அத்தை காலையில் கோபமாக இருக்கிறார்கள்? ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. ஆமாம். நேற்று அவர் மகனிடம் வேணி கல்யாணத்திற்கு லோன் போடணும்னு சொல்லியிருந்தார். நான் சொன்னேன் இப்பவே எதுக்கு ? அளியன்ஸ் பார்த்துட்டு கல்யாணத்திற்கு 3 மாதம் முன்பு போடலாம். எவ்வளவு பட்ஜெட்டோ அதில் கால் பங்கு இப்போதிருந்தே மாதா மாதம் சேர்க்கலாம். என் கருத்து எப்போதும் போல அவர்களுக்கு பிடிக்கவில்லை. என்ன செய்ய? கந்த சஷ்டி சொல்ல ஆரம்பித்தேன். ஆபிஸ் க்குள் போனதும் கிரிஜா என் காதை கடித்தாள். உன்னை மேனேஜர் கூப்பிடுவார். நேற்று நீ ப்ரெசென்ட் பண்ண ஐடியா வையும் உன் பட்ஜெட் யும் சுகந்தி தப்புன்னு போட்டு குடுத்துட்டாள். நான் மேனேஜர் ரூமுக்குள் சென்றேன். வாங்க மேடம் என்றார். குட் மோர்னிங் சார் என்றேன். சொல்லுங்க சார் என்றேன்.
மேடம் நீங்க நேற்று கொடுத்த பட்ஜெட் சரிவராதுன்னு நான் பீல் பண்றேன் என்றார். சரி சார். சார். என் பட்ஜெட்டையை கண்ணை மூடிட்டு ப்ரோஸஸ் பண்ணுங்கன்னு நான் சொல்லலை. எந்த ஒர்க்கும் யாருதுன்னு பார்க்காதீங்க. எப்படி இருக்குன்னு பாருங்க. மற்றவங்க ஒர்க் நல்லா இருந்தா நானே பாராட்டுவேன். அதைதான் எனக்கும் நான் எதிர்பார்க்கிறேன். எல்லோரும் கம்பனிக்கு தான் உழைக்கிறோம். கம்பனிக்கு எது நல்லதோ அதை செய்யுங்க சார் என்று வந்து விட்டேன். எனக்குள் இருந்ததெல்லாம் ஒரே கேள்வி தான். ஏன்? எல்லா இடத்திலும் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு போட்டியாக வருகிறாள்? வருவது என்ன? ஏன் ? போட்டி என்று நினைத்து மற்ற பெண்ணின் திறமைகளை அழிக்கிறாள். இது மறைமுகமாக பெண்ணுக்கு பெண்ணே இழைக்கும் அநீதி என்று ஏன் புரிவதில்லை. பெண்களுக்குள் இல்லாத ஒற்றுமையை ஆண்கள் எல்லா இடங்களிலும் பயன் படுத்திக்கொள்கிறார்கள். உலகில் பெண்ணினம் ஆணினத்திடம் சுதந்திரம் கேட்கிறது. முதலில் பெண்கள் பெண்களின் தீய குணங்களில் இருந்து வெளி வரணும். எப்போது ? என்ற ஏக்கத்துடன் வேலையே கவனிக்க தொடங்கினேன். மாலை ஆறு மணி என்பது எல்லோரும் கிளம்பும் போது தான் உணர்ந்தேன்.
மீண்டும் வீட்டுக்கு ஓட்டம். வந்ததில் இருந்து வேணி என் மாமியாரிடம் ஏட்டிக்கு போட்டியாக பேசிக் கொண்டிருந்தாள். வேணி முகம் கோபத்தில் சிவந்திருந்தது. கேட்டும் கேட்காதது போல் கிட்சேனுக்குள் சென்று காப்பி போட ஆரம்பித்தேன். இப்போ போய் கதை கேட்டால் நம் வேலை முடியாது என்று என் இல்ல கடமைகளை செய்ய தொடங்கினேன். பெண்களுக்கு மட்டும் இல்ல கடமை அடுத்து இல்லற கடமை. பெண் என்பவள் எல்லோருக்காகவும் உழைப்பதை விரும்பியே செய்கிறாள். அதனால் தான் அவளின் ஒவ்வொரு செயலிலும் முழுமை தெரியும். அன்பு தெரியம். இதில் எல்லாம் பெண்ணுக்கு எப்போது நிறைவு தரும்? அவள் எத்தனை வேலையும் செய்யக்கூடியவள். அவளது வேலைக்கான பலன் தன்னிடம் கணவனும் உறவுகளும் உண்மையான அன்புடனும் நட்புடனும் இருக்கும் போது தான். வீட்டில் மட்டுமல்ல. இன்றைய பெண்கள் அலுவலகத்திலும் இதே உண்மையும் நேர்மையும் தான் எதிர் பார்க்கிறார்கள். அது கிடைக்காத போது சோர்ந்து விடுகிறார்கள். வேலை முடித்து ஹாலில் வந்து அமர்ந்தேன். சூர்யாவும், சம்யுக்தாவும் ஹோம் ஒர்க் முடித்து விட்டார்கள். அவர்களும் வந்து டிவி பார்க்க தொடங்கி இருந்தார்கள். இன்னமும் கோபமுடன் வேணி. அண்ணி, என்னனு கேட்க மாட்டீர்களா? அவளின் கேள்விக்கு மாமியாரின் பதில் . " அவளுக்கு உன்னை கவனிக்க எங்க நேரம் " ? உண்மையில் நேரம் இல்லை என்பதை ஒப்புக் கொள்வார்களா? நான் வேணியிடம், சரி சொல்லு வேணி; உனக்கு என்ன பிரச்சனை? என்றேன். அண்ணி, நானும் என் பிரின்ட் வேதாவும் காம்பெடிஷன் ல பேசினோம். அது வரை என்னுது தான் நல்லா இருந்ததுன்னு அவளே சொன்னாள். ஆனால், ஜெட்ஜெஸ் வந்து அவளுக்கு பரிசு அனோன்ஸ் பன்னிட்டாங்க. அவள் என்னடான்னா எனக்கு பரிசு விட்டு தரேன்னு சொல்றாள். இது என்ன நியாயம் ? என்ற அவளின் கோபத்தில் நான் நியாயத்தை தேடினேன். கிடைக்கவில்லை. வேணி இப்போ உன்னோட கோபம் யாரு மேல? உன்னை விட உன் பிரின்ட் நல்லா பேசினால் னா? இல்லை ஜெட்ஜெஸ் சொன்ன ரிசல்ட் லயா?
இல்ல உன் பிரின்ட் மேலயே வா? யாரு மேல உன் கோபம் ? கொஞ்சம் சிந்தித்து பார். மற்றவங்க ஸ்கில்ஸ் யை பாராட்ட தெரியாத யாரும் தன்னுடைய ஸ்கில்ஸ் யை மதிக்க தெரியாதவர்கள் . வெற்றி என்ற சின்ன சந்தோஷத்துக்காக நம்முடைய நட்பு என்ற பெரிய உறவை தூக்கி எறிவதா?
இல்லை. ஜெட்ஜெஸ் மேல கோபம் பட்டு அந்த காம்பெடிஷன் யையே தப்புன்னு சொல்வதா? நீயே சிந்தித்து பார். நமக்குள்ள தேவைப்படும் தெளிவை விட்டு நிறைய பேர் மற்றவர்களை குறை சொல்லி தப்பிப்பதால் யாருக்கு நஷ்டம் ? நமக்கு தான். தெளிவு என்பது தோல்வியை ஒப்புக்கொள்வதல்ல . தோல்வியும் வெற்றியும் சரி சமமாக பாவிக்கும் குணத்தை நமக்குள் கொடுப்பது. இதை தான் ஒரே வார்த்தையில் கண்ணன் சொல்கிறார். " கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே " என்று.. இதை கேட்ட சூர்யா ஹொவ் ஐஸ் இட் அம்மா ? என்றான். சூர்யா, நீ இப்போ ஒரு பரீட்சைக்கு போகிற. சரியா? படிக்கவே இல்லை. ஆனாலும் நீ தான் முதல் மார்க். ஹொவ் டூ யூ பீல் ? இட்ஸ் சோ ஹார்ட் டு டிஜெஸ்ட் அம்மா. என்றான். இதே நீ நல்லா படித்துவிட்டு சென்ற எக்ஸாம்ல நல்லா மார்க் வாங்கலைன்னா ? ஹொவ் வில் யூ பீல் நொவ் ? இ வில் பெ சோ சாட். இட்ஸ் கரெக்ட். இது இரண்டுமே உன் மன நிலை. இப்போ நீ நல்லா ஹார்ட் ஒர்க் பண்ணியும் நல்லா எக்ஸாம் எழுதி இருக்க. அப்பயும் உன் மார்க் கொஞ்சம் கம்மி. நொவ் ஹொவ் வில் யூ பீல் ?
இ கேன் அண்டர்ஸ்டாண்ட் நொவ் அம்மா. நம்ம ஹார்டஒர்க் மட்டும் தான் நம்ம கையில் இருக்கு. நாம அதை முறையாக செய்து விட்டால் அது தான் நமக்கு முழு திருப்தி தரும். ஓகே வா? சுபெர்ப்.. என்று கை தட்டி ஆரவாரித்தாள் சம்யுக்தா. ஆம் நாம் எந்த செயலை செய்தாலும் நமக்கு திருப்தி தரும் வரை அதை செய்வோம். அதற்கு பின் அடுத்த செயலுக்கு சென்று விடுவோம். ஆமாம் அம்மா. அது தான் சரி. அம்மா நான் ஒன்று சொல்லவா என்று ஆரம்பித்தாள் சம்யுக்தா. இன்று ஸ்கூல் ல ஒரு கேள்வி கேட்டாங்க. அதுக்கு நான் ஒரு பதில் சொன்னேன். மிஸ் கிளாப் பண்ணாங்க தெரியுமா ? என்றாள். எல்லோரும் ஆர்வத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தோம். அம்மா மிஸ் சொன்னாங்க 32 % பார்லிமென்ட் ல பெண்களுக்கு ஒதுக்கி இருக்காங்க இதை பற்றி கருத்து சொல்ல சொன்னாங்க. எல்லோரும் ஒரு ஒரு கருத்தாக சொன்னாங்க. நான் சொன்னேன். மிஸ் , 32 % ன்னு எதுக்கு ஒதுக்கணும் னு கேட்டேன். அதுக்கு எல்லோரும் அது கூட வேணாமான்னு சிரிச்சாங்க. நான் சொன்னேன். இல்லவே இல்லைன்னா தான் நமக்கு மற்றவங்க தரணும். நமக்குள் ஒற்றுமை இருந்தால் நமக்கு ஏன் மற்றவங்க தரணும் ? னு ; மிஸ் க்கு புரியல . நீ என்ன சொல்ல வர? ன்னு கேட்டாங்க. நான் சொன்னேன் நம்ம கிளாஸ் ல மொத்தம் 45 ஸ்டுடென்ட்ஸ். அதில் பெண்கள் 25 பேர். அப்போ 55 %. இந்த அனைவரும் ஒன்று பட்டால் நம்ம தேவைகள் மற்றும் வேலைகளை நாமே சிறப்ப செய்ய முடியும் தானே ? என்றேன். சபாஷ் " என்ற படி என் கணவரும் வந்து சேர்ந்தார். அப்புறம் என்ன நடந்தது ன்னு நாங்க இன்னும் கேட்டோம். அவள் சொன்னாள். " மிஸ், எங்க வீட்டில் மொத்தம் 6 பேர். இதில் அம்மா , பாட்டி, அத்தை, நான் என்று நாங்க 4 பேரும் பெண்கள். ஆக 60 % பெண்கள். இதே போல எல்லார் வீட்டிலும் ஆபீஸிலும் பெண்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும். அவர்கள் ஒற்றுமையாக செயல் பட்டால் நாம எதுக்கு ஆண்களிடம் இருந்து உதவி எதிர்பார்க்கணும் ? நான் இப்படி பேசியவுடன் மிஸ் மற்றும் எல்லோரும் கை தட்டினார்கள் என்றாள். சுபெர்ப்..என்று என் கணவரும் மற்றும் சூர்யா வும் பாராட்டினார்கள். இங்கும் ஒரு பெண்ணை அவளின் அறிவை பாராட்ட பெண்கள் முதலில் முன் வர வேண்டும். வேணியும் என் மாமியாரும் அவளை மெச்சினார்கள். நான் காலையில் எனக்குள் கேட்ட கேள்விக்கான விடை இதுதானோ ? வேணியும் அவளின் கோபத்திற்கான விடை இதுவென உணர்ந்து கோபம் மறந்து சிரித்தாள். இந்த குழந்தையின் அறிவான பார்வையும் பாரதி கனவு போல வார்த்தையாக மட்டுமே நின்று போகுமோ ? கலாம் கனவு போல காணாது போகுமோ ? என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ? " சுதந்திரம் என்பது நமக்குள் இருக்கும் தடைகளை உடைப்பது என்பதை பெண்கள் உணர்வார்களா? பெண்ணே பெண்ணை போட்டி என்றெண்ணும் மடமை தீருமா ? மாமியார் தன் மருமகளை தன் போல பார்க்கும் நிலை வருமா ? வேறு பெண் தானே என்று தீமை சொல்லி தூற்றும் அவலம் அலுவலகத்தில் மாறுமா ?
பெண்கள் எப்போது மற்ற பெண்களை தன்னை போல் நினைத்து உதவும் நிலையின் போது தான் ஆண்களும் பெண்களை மதிப்பார்கள்.
உண்மை தான். மெல்லினமாம் பெண்மை ஒவ்வொரு வீட்டிலும் வல்லினமாய் மாறும் காலம் என் குழந்தையின் தலைமுறையில் நிச்சயம் வரும். நம்பிக்கையோடு வாழ்வது தான் வாழ்க்கை. பெண்ணே உன்னை வென்றால் உனக்குள் இருக்கும் குறைகளை களைந்தால் நிச்சயம் உலகை வெல்வாய்.

எழுதியவர் : சம்யுக்தா ( நரேனி தாசன் ) (16-Jun-20, 7:26 pm)
பார்வை : 122

மேலே