உன்னோடு நான்
உன்னோடு நான்
நான் கோபாலகிருஷ்ணன். என் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடிவந்த ஹமீது இடம் அறிமுகப்படுத்திக் கொண்டென். நான் வீட்டுக்குள் செல்லும்போது அவர் வெளியில் சென்று கொண்டிருந்தார். ஈவினிங் பார்க்கலாம் சார் என்றார். அன்று மாலை ஹமீது வரும்போதும் நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஹாய் சார் என்று என்னை பார்த்த பார்வையில், உங்கள் கேள்வி புரிகிறது. என்னை பற்றி நானே சொல்கிறேனே. என் தினசரி வேலை காலையில் வாக்கிங் போவது. மெல்ல சிந்தித்தபடி காபி குடிப்பது. என்னை பார்த்தும் பார்க்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்களை வேடிக்கை பார்ப்பது. உங்கள் கேள்வி புரிகிறது. இவனுக்கு வேலையே இல்லையா ? என்று தானே, என்று சிரித்தேன். இந்த உலகில் அறுபது வயதுக்கு மேல் உள்ளவர்கள்- நடுத்தர வர்க்கம் என்ன செய்வார்களோ அதை தான் நானும் செய்து கொண்டு இருக்கிறேன். என்ன என் மனைவி அவள் கடமைகள் முடிந்துவிட்டதென்று இறைவனடி சேர்ந்து விட்டார். என் குழந்தைகளோ அவரவர் கடமைகள் தேடி ஓடிக்கொண்டு இருப்பதால் வருடம் ஒரு முறை எப்போதோ வருவார்கள். சுவாரஸ்யமில்லாமல் நாட்களை கடத்தும் வாழ்க்கை- வாங்க சார் என்று, எனது உரையை கேட்டுக்கொண்டே உள்ளே அழைத்தார் ஹமீது. நானும் சென்றேன். சிறிது நேரம் பேசிவிட்டு நாளை பார்க்கலாம் என்று வாக்கிங் செல்ல ஆரம்பித்தேன். அடுத்த நாளும் நான் ஹமீதை பார்த்தேன். இப்படியே ஒரு வாரம் ஓடிவிட்டது. அடுத்த நாள் காலை நான் வாக்கிங் முடித்து திரும்பும்போது ஹமீத் வீடு பூட்டி இருந்தது. நான் கதவை தட்டினேன். கொஞ்ச நேரம் திறக்கவில்லை. தொடர்ந்து தட்டினேன். சிறிது நேரம் சென்றதும் ஹமீத் நடக்க முடியாமல் நடந்து வந்து கதவை திறந்தார். என்ன பா? உடம்பு சரியில்லயா? என்றதும் ஆமாம் சார், கொஞ்சம் பீவர். என்றார். கொஞ்சம் பொறுங்கள் என்று என் வீட்டுக்கு சென்று டேப்லெட் மற்றும் “கஞ்சி” செய்து கொடுத்தேன். எதற்கு சார் உங்களுக்கு சிரமம் என்ற படி வாங்கி கொண்டார். இதில் என்ன சிரமம் ? மனுஷனுக்கு மனுஷன் ஒரு உதவி தானே? என்றேன். மதியம் சென்று பார்த்துவிட்டு மீண்டும் கஞ்சி செய்து கொடுத்து வந்தேன். அடுத்த நாள் அவர் ரெஸ்ட் எடுத்ததும் கொஞ்சம் காய்ச்சல் பரவாயில்லை. மறுநாள் அவர் வேலைக்கு சென்று விட்டார். எங்கள் சந்திப்பு ஒரு மாதம் இப்படியே இருந்தது.
எப்போதும் போல் மிக நீண்ட வாக்கிங் அன்று. என் பின்புறம் ஹலோ சார் என்ற சப்தத்திற்கு திரும்பினேன். ஹமீத் சிரித்தபடி. என்ன சார்.. ரொம்ப சிந்தனை. என்று ஞாயிற்று கிழமை . மஹாபாரதம் ஹிந்தி வெர்ஸன் தமிழ் ட்ரான்ஸ்லஷன் போடுவாங்க. அவர்களின் கருத்து செறிவு மிக்க சொற்கள் எனக்குள் ஊடுருவுகிறது. ஏன் நம் தமிழ் வெர்ஸன் ல் அந்த ஆழமான கருத்துக்கள் இல்லையே. என்று சிந்திக்கிறேன். சாரி பா. உனக்கு இது குறித்து தெரியாதில்லயா? என்றேன். இல்ல சார். எனக்கு இந்த ஞானம் கொஞ்சம் இருக்கு. நான் வேலை செய்வது நியூஸ் பேப்பர் சேனல். நமக்கு அறிமுகமில்லாத விஷயங்களை பேசக்கூடாது என்ற சபை நாகரீகம் இன்று இல்லை. எனக்கு மஹாபாரதத்தை அறிமுகப்படுத்தியவர் என் தாய். அவர் சொல்வார், மனிதனை நெறிப்படுத்தும் எந்த நல் வழிமுறையும் எங்கிருந்தும் நாம் கற்றுக்கொள்ளலாம் என்பார். உண்மை தான். இன்றைய தலை முறையினர் இத்தகைய நெறியான சிந்தனைகள் இன்றி தான் தடம் மாறி போகிறார்கள். இருவரும் சேர்ந்து நடந்தோம். நான் பத்து மணிக்கு வந்து உங்களை பார்க்கிறேன். எனக்கு நீங்கள் செய்த உதவிக்கு நன்றி சார் என்றேன். போதும் உங்கள் நன்றியால் என்னை நனைத்துவிடாதீர்கள் என்றேன்.
வீட்டிற்கு சென்றவுடன் நானும் எனக்கு தெரிந்த சமையலை செய்து வைத்தேன். ஹமீத், சார் நான் வந்துட்டேன் என்று சப்தம் வந்ததும், வரலாம் வாங்க என்றேன். கொஞ்சம் சாப்பிடுங்கள் உங்களுக்கும் சேர்த்து தான் செய்திருக்கிறேன். ஹமீது சாப்பிட்டு பாராட்டினான்.
ஓகே. அடுத்து உங்க பிளான் என்ன? என்றதும் ஹமீது , சொன்னார், சார் நான் என்னுடைய வீக் எண்டு முழுக்க எனக்கு தெரிந்த குழந்தைகள் காப்பகம் சென்று அந்த குழந்தைகளுக்கு ஒரு அண்ணனாய் என் உறவை கொடுத்து நட்புடன் ஸ்பென்ட் பண்ணுவேன் சார். என்றார். ஓகே ஹமீது நானும் உன்னுடன் வரவா என்று நட்பை வார்த்தையின் நெருக்கத்தில் உணர்த்தினேன். சரி சார். நிச்சயம் போகலாம் என்றார்.
அந்த குழந்தைகளை காணும் போது மனதுக்குள் துன்பம் இருந்த போதும் அதை மீறி அவர்கள் மீது ஒரு பாசம் வந்தது. ஹமீது குழந்தைகளுக்கு பாடம் நடத்தினான். நான் அங்கு இருந்த பெரியவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். இத்தனை நாளில் இந்த நாளுக்கு ஒரு அர்த்தம் இருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது. வீட்டுக்கு திரும்பும் போது சார் ஹொவ் வாஸ் தி டே என்றதும் எனக்கு சூப்பர் என்றேன். என்னை பொறுத்த வரை இந்த பூமி இன்னும் சுத்துவதற்கு காரணம், எங்கோ ஒருவர் எந்த உதவியும் எதிர்பார்க்காமல் வியர்வை சிந்தி உழைப்பது தான். அந்த உழைப்பு நிற்கும்போது தான் இந்த உலகம் சுற்றுவதும் நிற்கும். நீங்கள் சொல்வது கரெக்ட் தான் சார். இரவு உறக்கம் நன்றாக வந்தது.
அடிக்கடி நான் அந்த காப்பகம் செல்ல ஆரம்பித்தேன். என் வாழ்க்கை பயனுள்ளதாக மாறியது. நல்ல நட்பு எங்களுக்குள் மலர்ந்தது. ஹமீதின் சின்ன வயதில் நல்ல சிந்தனைகள் மிகவும் எனக்கு பிடித்தது. வறண்டு போன வாழ்க்கையின் தென்றல் போன்ற நட்பு சந்தோஷம் தந்தது. இலக்கியம் பகிர்ந்தோம். சுஜாதா கதைகளின் அறிவியல் பற்றி விவாதித்தோம். எங்களின் தனிமை புதிய நட்பின் மலர்தலில் மறைந்து போனது.
இன்று நான் .. என் வாழ்க்கை .. புதிய புன்னகை...புதிய பயணம் ...
காலை வாக்கிங் முடித்து வருவதற்குள் ஹமீது டிபன் ரெடி செய்திடுவான். நான் சாப்பிடுவேன். மதியம் சாப்பாடு அண்ட் நைட் டிபன் ரெடி செய்கிறேன். என் வீட்டில் சந்தோசமாக நிறைய படிக்கிறேன். அவ்வப்போது எழுதவும் செய்கிறேன். நானும் காத்திருக்கிறேன். உன்னோடு நான் என்று என் நண்பனுக்காய்.
“இறைவா , என்னை சுத்தம் செய்கிறேன்.
நித்தம் நித்தம் யுத்தம் செய்து - உன் பெயரால்
எனக்குள் என்னை சுத்தம் செய்கிறேன்
நல்லவை வாழ்வும் தீயவை வீழவும் யுத்தம் செய்கிறேன்.
என்னை சுத்தம் செய்திட நித்தம் நித்தம் யுத்தம் செய்கிறேன்.”
புதிய பகவத்கீதை யின் வரிகளை புதிய தேடலாய் யாரோ இசைப்பதை ரசிக்கும் ரசிகனாக என்னை உணர்கிறேன்.
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவேன் என்ற பாரதி வரிகளின் அர்த்தம் புரிகிறது. அன்பு உள்ளவரை உணவில்லாமல் போகாது. அன்பு என்பது உள்ளவரை பயிரும் கூட வாடி போகாது .
இந்த அன்பு என்பது உள்ளவரை இந்த உலகில் எவருமே தனி இல்லை. எவருக்கும் தனிமை இல்லை. மனிதம் நிறைந்த மனதோடு காத்திருங்கள் உங்களுக்கும் தனிமை மறக்க நல்ல உறவுகளோடு இந்த உலகம் காத்திருக்கிறது. நாம் தான் மனம் வைக்க வேண்டும். நம் வாழ்க்கை சிறக்க. நம் நாட்கள் மகிழ்வுடன் செல்ல. "நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப்படும்" வள்ளுவன் வாக்கு என்றும் பொய்ப்பதில்லை.