அவர்கள் அப்படித்தான்
அவர்கள் அப்படித்தான் நீ ஏன் இப்படி சொல்லிவிட்டு வந்தாய் ,
முத்தம்மா தனது தங்கையான செல்லம்மாவுடன் கடிந்துவிட்டு .இப்பொழுது மகள் வேலை முடித்து வருவாள் கொஞ்சம் வீட்டில் இரு .அவள் வந்தவுடன் நீ போகவேண்டும் என்றால் போ அதுவரை
வேறுயெங்கும் சென்றுவிடாதே என்று விட்டு கண்கள் சிவப்பாக முகம் கசங்கிய வண்ணம் . முத்தம்மா ,
வெற்றி மட முருகன் கோயில் நண்ணீர் கிணற்றடி நோக்கி விரைந்தாள் ..
அப்பொழுது அங்கே முத்தம்மாவின் உறவுக்காரர் இருவர் கடிந்து கொண்டு உரத்த குரலில் பேசிக்கொண்டு இருந்தனர். .நீ பார்த்த வேலை நீ ஏன் செல்லம்மாவுக்கு சொன்னனீ இப்ப அவள் போய் சகோதரிக்கு சொல்லி இருப்பாள் அவளுக்கு கோவம் வரப்போகிறது இனி என்ன நடக்குமோ எனக்கு தெரியாது .வீணான மனசஞ்சலம் சண்டையும் தான் வரப்போகிறது என்று கூறி முடிக்க.
முத்தம்மா அந்த இடத்தை நெருங்கினாள் .அவர்களும் ஒன்றுமே தெரியாத மாதிரி அதில் ஒருத்தி என்னடி முத்தம்மா அவசரமாய் அவசரமாய் ஓடி வந்துவிட்டாய் .என்ன புதினம்மடி" என்று கேட்க
.அடி நாக்கில் நஞ்சு, நுனிநாக்கில் அம்ருதம் ம் என்று
அவளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.எனினும் பொறுமை காத்த வண்ணம் மனதில் ஏதோ தோன்ற மௌனமாகி சிந்தனையில் மூழ்க தொடங்கினாள் .போனது வருமா ?விடிந்தால் கிடைக்குமா ?
அட கடவுளே ..இப்படியும் அப்படியும் கதை கட்டுவித்துதானே ,
என்னுடைய மகனின் {குமரன் } வாழ்வையும் சீரழித்து போட்டார்கள் இப்ப மகளுடைய வாழ்விலும் கரி பூச துடிக்கிறார்களே ;
என் குடும்பத்திற்கும் இன்னும் கெட்ட பெயர் வாங்கி கொடுக்கவே" துடிக்கிறார்களே .திருந்தவே மாட்டார்களோ அட கடவுளே எப்பதான் இந்த சமூகம் திருந்த போகுது .
வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் பழமொழியும் அவளின் மனதை அடிக்கடி அமைதியாக்கினாலும் மனதில் கலந்த வெறுப்புகள் கடந்த காலத்தை நோக்கி நகர்த்தியது .
‘அடடா.. என்ன தாராளமனசு’ மனசுஎன் மகனுக்கு பாசத்தில் என்னையே விஞ்சுவான் .குடும்பத்தில் எவ்வளவு அளவுகடந்த பாசம் கொண்டு இருந்தான் ..ஆனாலும் காலத்திற்கும் காலனுக்கும் அவனை பிடிக்கவில்லையோ விதி விளையாட தொடங்கியது ,
அந்த காலப்பகுதி யுத்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அமைதி நிலவிய காலம் .அந்த நேரம் வன்னியில் இருந்து வந்த சில போராளிகளில் மகனின் நண்பன் முகிலனும் வந்து இருந்தான் .
அவனை எதிர்பாராமல் சந்தித்த என் மகன்{குமரன் } நீண்டநாளுக்கு பின்னர் கண்ட சந்தோசத்தில் வீட்டுக்கு அழைத்துவந்தான் .அவனும் குமரனின் அன்புக்கு அடிபணிந்து வீட்டுக்கு வந்து இருந்தான் .
இதை உற்று நோக்கிய வண்ணம் இருந்த கிராமத்து மக்களும் .அவ்வப்பொழுது முகிலனை கண்டு கொள்ளும் போது நலம் விசாரித்து செல்வார்கள் .இப்படியே சில காலம் கடந்தது .அதன் பின்னர் யுத்த மேகங்கள் ஒன்று சேந்துவிடவே முகிலனும் வன்னி சென்றுவிட்டான் .
அதன் பின் சில மாதம் கழிய வீட்டுக்கு வந்த சில நபர்கள் குமரனை கூப்பிட்டு .உன்னுடைய அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு வா .உன்னை விசாரிக்கணும் என்று கூற .அவனோடு வந்து இருந்த அப்பாவும் நியாயம் கேட்க .அவரையும் உதைத்துவிட்டு மகனை தூக்கி சென்றார்கள் ,அதன் பின்பும் பல இடமும் அலைந்து அவனை கண்டுபிடிக்க முடியவில்லையே .இவர்கள் இப்படி இருந்தால் அப்படியும் கதைப்பார்கள் இல்லையென்றால் இப்படியும் கதைப்பார்கள் ..வலிக்குதே என்று நினைக்கவும் மகளும் அம்மா அம்மா என்று கூப்பிட தொடங்கினாள்
கதை எழுத்தாளர்
அகிலன் ராஜா
கதைப்பார்கள்