காதல் நிலவு
தினம் தினம் உன்மேல் கொண்ட காதல் வளர்கிறது
அதை நினைக்கும் பொழுதெல்லாம் குளிர்கிறது
உன் நிறமோ கருமை தான்
ஆனால் அதில் உனக்கு எத்தனை பெருமை
இசைஞானி பாட்டு கூட ருசிக்கவில்லை
உன்னோடு சேர்ந்து கேட்காத பொழுது
உன்னை பார்க்கும் பொழுதெல்லாம்
தாய் மடியின் வெப்பம் உணர்தேன்
காதலின் தாகம் அறிந்தேன்
நண்பனின் நட்பில் துலைந்தேன்
என் தனிமையில் நீயே எனக்கு மூன்றுமாய்
வெள்ளை சாந்தில் பொட்டிட்டது யார் உனக்கு
சிந்திய துளிகளில் அழகாய் மிளிர்கிறது நட்சத்திரம்
மீண்டும் மீண்டும் உன் அழகில் மயங்கி விழுகிறேன்
என் நிலவே