முதிர் காதல்
காலமது தீர்கிறது
ஆனால் காதல் உன்னில் தீரவில்லை;
கூந்தல் அது நரைத்தாலும்
அதில் மயங்கி இன்னமும் நான் எழவில்லை;
நடை தளர்ந்தாலும்
உன்னுடன் தளர்ந்து நடக்க பாதை அது போதவில்லை;
கண்ணாடி கண்களை சிறை செய்தாலும்
அதில் விழுந்து நான் மீளவில்லை;
உன்னோடு வாழ்ந்த நாட்களில் வலியில்லை
நீ இல்லாமல் வாழ வழியுமில்லை;
சுவாசம்அது குறைந்தாலும்
என் நேசம் உன்னில் குறையவில்லை;
நீ இன்றி வாழ நினைத்தாலும்
அந்த வழக்கை இனிக்கவில்லை
ஏன் என்று நினைத்து பார்க்கையில்
கண் முன் வந்து நின்றது
முதிர்ந்த காதல் நிலை