எண்ணங்கொள்வதில்லை
எழுத்தளவிலும் பெயரளவிலும் மட்டுமே யாவும் இங்கு
சொல்லுக்கும் செயலுக்கும் தூரம் பன்னெடு காதம்
எத்திட்டம் இயற்றினும் அவை யாவும் பணமாகவே
பயன்பட எவையும் பலமாக செய்யப்படுவதில்லை
மக்களின் ஆட்சியில் எல்லாமும் மாசடைந்தே
உரிமையுடையோர் யாவரும் புலன்கள் அடைத்தவராய்
நமக்கான அரசென்று குடிகள் எண்ணங்கொள்வதில்லை
கிடைக்கும் வரை வசூலிக்க துடிக்கின்றனர் யாவரும்
அரசன் முதல் ஆண்டிவரை யாரும் விலக்கில்லை இதில்
துயரின் போது துள்ளி எழுந்து குதிப்பது நியாயமோ
ஒவ்வொரு திட்டமும் வகுப்போருக்கு வளம் சேர்க்கவே
எதிர்கட்சியாயினும் ஆளுங்கட்சியாயினும் உடன்பட்டே
பொதுவில் கிடைப்பது நாயிக்கான பொறைபோலே
இனியாயினும் மக்கள் ஆழ்ந்து நோக்க வேண்டும்
அரசுகளின் திட்டங்கள் அத்தனையும் நலமா என்று
அவ்வாறு நோக்காயின் அனைத்திலும் துன்பமே.
------ நன்னாடன்.