அவள்
அவள் கூந்தலில் அன்றலர்ந்த
வாசமிகு குண்டுமல்லி சூடியிருந்தாள்
குண்டுமல்லி அவள் கார்குழலை
அழகு செய்ததா இல்லை அவள்
கூந்தலால் மல்லி அழகானதா என்றால்
என்ன பதில் கூறுவது என்றெண்ணி
நான் ..... இதை ஒன்றும் அறியா அவள்
'மல்லிகை என் மன்னனுக்கு உகந்த
மலர் என்று மெல்ல குயில்போல்
பாடுவது என் கதை எட்டியதே ...
மிக்க அழகில் மின்னிய இவள் எளிமை