அனுசரித்துப் போ
நூதனமாய் சாய்க்கவரும் நோயை எல்லாம்
=நுழைவாயிற் குள்ளெடுக்கும் நோக்கம் வேண்டாம்
பாதணியைக் கலற்றிவாசல் படிமேல் விட்டுப்
=பவித்திரமாய் உள்நுழையும் பாங்கே வேண்டும்
வேதனையைப் பூட்டியுந்தன் வீட்டில் வைத்து
=வெளியேநீ சென்றுவரும் வேளை வேண்டாம்
காதலுடன் உனக்கென்றே காத்தி ருக்கும்
=கண்மணியாம் குடும்பமென்றக் கவனம் வேண்டும்
**
வேதனந்தான் இல்லையெனில் வீட்டுக் குள்ளே
=விளையாடும் வறுமையெனும் வேட்கை யென்றே
நாதன்நீ காலெடுத்து நடக்கும் சாலை
=நடமாடிச் சீரழிக்க நாடும் நோயாம்
ஆதலினால் எச்சரிக்கை யாக நீயும்
=அண்டவரும் நோய்க்கிருமி யணுகா வண்ணம்
போதலிலே தானிருக்கு புதிய வாழ்க்கை
=புரிந்துகொண்டு அனுசரித்துப் போனால் நன்று
**
**