சருகுகள் விதையாகுமா

சருகுகள் விதையாகுமா?

இயற்கையும் இறைவனும் ஒண்ணு. இரண்டும் எது நடந்தாலும் நடக்காவிட்டாலும் எந்த வேறுபடும் இன்றி ஒரே மாதிரி இருக்கும். இது தான் உலகின் பெரும்பான்மையினர் கருத்து. ஆனால் என் கருத்தே வேறு. என்ன தெரியுமா? இயற்கையும், இறைவனும் நாம் எதை செய்கிறோமோ, அதையே நமக்கு பல மடங்கு திருப்பி தருவார். ஆச்சர்யமா இருக்கா ? இந்த ஒரே கொள்கை தான் என்னை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் நல்லவைகளை தேடி சந்தோசமாக வாழ வைக்கிறது. நான் யார் என்று அறிய நினைக்கிறீர்கள். ரைட் ? நான் வாசுகி. இந்த உலகினில் ஒரு மூலையில், எந்த எதிர்பார்ப்புமின்றி சந்தோசமாக வாழும் ஒரு பிரஜை. சாப்ட வெர் கம்பெனி வேலையை உதறி விட்டு வேறு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ஊருக்கு கிளம்பி செல்கிறேன். வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை உலகினில் பழைய படத்தின் பாடல் வரிகள் கேட்டன. நல்ல பாடல். நல்ல சகுனம். பஸ்ல ஏறினவுடன் இடம் தேடி அமர்ந்தேன். பின்னால் இருந்து பழக்க பட்ட குரல் மாதிரி கேட்டது. இரண்டு முறை திரும்பி பார்த்தேன். கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் அவள் தான் பூஜா. எத்தனை அழகாய் இருப்பாள். இப்போ ஏன் இப்படி மாறிப்போனாள்? யோசித்துக் கொண்டே அவளை பார்த்து "ஹாய் பூஜா " என்றேன். என்னை பார்த்து கஷ்டமுடன் கொஞ்சம் ஸ்நேகமாய் சிரித்தாள்; நான் நலமா? என்ற கேள்வியுடன் நிறுத்தி விட்டேன். கஷ்டத்தில் இருப்பவர்களை மேலும் கஷ்டத்தில் ஆழ்த்த கூடாது. நம் தேவையற்ற கேள்விகள் மற்றவர்களை துன்பப்படுத்தும் . தேவையென்றால் அவர்களே நம்மிடம் வந்து பேசுவார்கள். பஸ் நடுவில் டிபன் சாப்பிடுவதற்காக நின்றது. நான் இறங்கும்போது பூஜா என்னுடன் ரெஸ்ட் ரூம் வந்தாள். என் போன் நம்பர் வேண்டும் என்றும், அவள் போன் நம்பர் எனக்கும் கொடுத்தாள். நாங்கள் கல்லூரி காலம் முடித்து எட்டு ஆண்டுகள் முடிந்து விட்டது. அதன் பின் இப்போது தான் இருவரும் பார்த்துக் கொள்கிறோம். நான் சேலம் சென்றதும் அவளிடம் பேசுகிறேன் என்றேன். சரி என்றாள்.
வாழ்க்கை என்பது ஒரு விசித்திரமான பயணம். நாம் தொடங்கும் போது திசை தெரியாது. ஆனால் நம்பிக்கையுடன் நாம் வாழப்பழகினால் நிச்சயம் நம்மை நல்ல படி வாழவைக்கும். கொஞ்ச காலம் சென்றதும் திரும்பி பார்த்தால் இத்தனை தூரம் வந்தோமா? என்ற ஆச்சர்யம் இருக்கும். எங்களுக்கும் அப்படித்தான். கல்லூரி நாட்களை நினைக்கத் தொடங்கினேன். 1st இயர்ல நான் பூஜா, இளவரசி, மற்றும் சினேகா, லாவண்யா என ஐந்து பெரும் நல்ல நண்பர்களாக இருந்தோம். நாட்கள் செல்ல செல்ல பூஜா, லாவண்யா இருவரும் பசங்க கூட பிரிண்ட்ஷிப் வைத்துக் கொண்டு காலேஜ் கட் அடிக்க ஆரம்பித்தார்கள். நாங்களும் தவிர்க்கச் சொல்லி பார்த்ததில் வீண் நேர விரயம் தான் ஆனது. புத்தி சாலிகள் தேவையற்ற இடத்தில் பேச மாட்டார்கள் . எங்கோ படித்தது உரைக்க நாங்கள் மூவரும் அவர்களிடம் இருந்து விலகிவிட்டோம். அடுத்த அடுத்த வருடங்களில் பார்ப்பதோடு சரி. பாடம், பரீட்சை என்று காலம் ஓடியது. காலத்தின் அருமை அது யாருக்கும் நிற்காது என்பதில் தான் இருக்கிறது.
கடைசி எக்ஸாம் நெருங்கும் போது லாவண்யா அழுதபடி எங்களிடம் வந்து சொன்னால், பூஜா அந்த சேகர் உடன் ஓடிவிட்டாள் வீட்டை விட்டு என்று. எனக்கு மிகவும் வேதனை என்ன தெரியுமா? நம்மை வளர்த்தவர்களை விட்டு விட்டு இந்த காதல் எப்படி ஒரு உறவை உயிருடன் பிரிக்கும் ? அப்படி பிரிந்து சென்றாலும் நாளை ? யை இவர்கள் எப்படி சந்திப்பார்கள் ?
புரியவே இல்லை எனக்கு. அடுத்த தலைமுறைக்கு இவர்கள் எதை முறைப் படி சொல்லித் தருவார்கள் ?
எங்கள் வகுப்பு ஆசிரியர் அடிக்கடி சொல்வார்: இந்த பூமியும், இங்கு உள்ள அனைத்து பொருட்களும், யாருக்கும் சொந்தமில்லை. நாம் இவைகளை பத்திரமாய் உபயோகப் படுத்திவிட்டு நமது அடுத்த தலை முறைக்கு விட்டு செல்ல வேண்டும். இந்த எண்ணம் நினைவில் இருந்தால் நம்மால் ஒரு பப்ளிக் டாய்லெட் கூட சுத்தமாக வைக்க முடியும் என்று. உண்மை தான் நம் முன்னோர்கள் இந்த மண்ணையும், மற்ற இயற்கையும் காத்து ஒரு பவித்ரமான வாழ்க்கை வாழத்தான் செய்தார்கள். நமக்காக நல்ல வாழ்விற்கான வழி முறையைகளையும் உயர்ந்த பண்பாடுகளையும் விட்டு சென்றுள்ளனர். அதனை காப்பாற்றி அடுத்த அடுத்த தலை முறைக்கு எடுத்து செல்வதும் நமக்கான கடமைகள் இல்லையா ? திடும் என்று பஸ் பிரேக் போட்டு என் நினைவுகளை கலைத்தது. இதமான காற்று என் முகம் வருட உறங்கி விட்டேன். அதி காலை சேலம் பஸ் ஸ்டாண்டில் அப்பா காத்திருந்தார். பூஜா வுக்கு டாட்டா காட்டி விட்டு சென்று விட்டேன். இரண்டு நாள் கழித்து பூஜா போன் செய்து சந்திக்க இயலுமா ? என்று கேட்டாள். நானும் ஓகே சொல்லி பக்கத்து பார்க் ல் சந்தித்தோம். கொஞ்ச நேரம் நல்ல நினைவுகளை பகிர்ந்து கொண்டோம். பூஜா விடம் கேட்டேன் "நீ என்ன செய்கிறாய் ?". பூஜா சொல்லத்தொடங்கினாள்; உனக்கே தெரியும்.நான் அவசரப் பட்டு திருமணம் செய்து கொண்டேன். படிக்க வேண்டிய வயதில் காதல் பாடம் படித்தோம். காதல் வாழ்க்கை பாடம் கற்று கொடுத்தது. நிறைய சங்கடங்கள். இருவரும் சமாளித்தோம். சென்ற வருடம் ஒரு ஆக்ஸிடெண்ட்ல சேகர் இறந்துட்டார். எனக்கு ஒரு பையன்.
என் வாழ்க்கையே இப்போ ஒரு கேள்விக்குறி யாக இருக்கு. படிக்க வேண்டிய வயதில் படிக்காமல் விட்ட தவறு இப்போ என் குழந்தையின் வாழ்வை கேள்வியாக்கிவிட்டது. என் தாய் வீட்டினரையும் கஷ்டப் படுத்த முடியலை. திருமணம் முறை படி நடக்காததால் அவர் வீட்டிலும் எனக்கு ஆதரவு இல்லை. "காலத்தே பயிர் செய் " ன்னு சும்மா யாரும் சொல்லி வைக்கலை. படிக்கிற காலம் பொற்காலம். அதை வீணாக்கினால் வாழ்க்கையே வீணாயிடுச்சி என்று கூறி முடித்தாள். எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. நான் இன்னும் கல்யாண வாழ்க்கையை தொடங்கவே இல்லை. என் தோழி அதை முடித்தே விட்டாள். சாரி பூஜா என்று நான் ஆரம்பித்தேன். காதல் என்பதற்கு நான் எதிரி இல்லை. ஆனால் நம் வாழ்வுக்கு அந்த காதல் எதிரியாகிடக் கூடாது . நமக்கு நல்ல படிப்பும் வேலையும் கிடைக்கும் வரை உண்மை காதல் நிச்சயமாய் வெயிட் பண்ணனும். வெயிட் பண்ணாத காதல் மன உளைச்சலையும், வாழ்க்கையையே சுமையாகவும் தான் மாற்றும். பேரேண்ட்ஸ் அக்ஸப்ட் செய்த திருமணங்களிலும் இந்த ஆச்சிடேன்ட் நடக்காதா ? ன்னு கேட்டால் நிச்சயம் நடக்கும். ஆனால் நமக்கு தோள் கொடுக்க உறவுகள் வரும். இல்லாவிட்டாலும் கற்ற கல்வி நம்மை கைவிடாது. என்றேன். பூஜா, " நீ எங்க வேலை பார்க்கிற ? என்று கேட்டாள். மௌனமாய் பார்த்தேன். என்ன சொல்வது ? ஐ டி கம்பெனி ல தான் ஜாப் பார்த்துட்டு இருந்தேன். அங்கேயும் வேலை ஜாஸ்தி ; திடிர்னு நைட் ஷிப்ட் மாத்திட்டாங்க. அங்க சிலரின் நடவடிக்கை மற்றும் நைட் Culture பிடிக்கலை. வேலை யை விட்டு வந்துட்டேன். இனிமே தான் சின்னதாக தனியா ஒரு கன்சல்டன்ட் கம்பெனி ஆரம்பிக்கலாம்னு பிளான் பண்றேன். நீ கவலைப் படாதே. இன்னும் இரண்டு மாதத்தில் என் புது கம்பெனில நிச்சயம் உனக்கு வேலை இருக்கும். நான் இப்படி சொன்னதும் அவள் ஓடி வந்து என்னை கட்டிப்பிடித்து சந்தோசத்தை வெளிப்படுத்தினாள். எனக்கு கடவுள் நல்ல பிரின்ட் யை மீண்டும் நல்ல நேரத்தில் சந்திக்க வைத்தார் என்றாள். எனக்கும் உன் போன்ற நல்ல பார்ட்னர் பிளஸ் நம்பிக்கையான தோழி தேவைப்படுதே. என்றேன். பூஜா சொன்னாள். " நிமிர்ந்த நன்னடையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சிடாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கு " ன்னு இதை தான் பாரதி சொன்னார் டி என்றாள். அவர் சொன்னது சரி தான் டி. அந்த மீசை புலவர் சொன்ன வரிகள் தான் என்னை இன்றும் வாழ வைக்கிறது. நான் நம்பி பின் பற்றுவது ஒண்ணே ஒண்ணு தான் இந்த உலகத்துக்கும் இயற்கைக்கும் நாம் என்ன கொடுக்கிறோமோ ? அது நேர்மை, உண்மை, உழைப்பு, நேசம், உதவி, எதுவோ அதை இறைவனும் இயற்கையையும் நமக்கு பல மடங்காக திருப்பி கொடுக்கும். அம்மா, அப்பா , தாத்தா மற்றும் மாமா போன்ற முன்னோர்கள் சொல்லிக் கொடுத்தது. இருவரும் விடை பெற்றோம். எனக்குள் தோன்றியது "அவள் காய்ந்த சருகு தான். இனி விதையாக முடியாவிட்டாலும், அவளின் குழந்தை எனும் விதை நன்கு முளைக்க நல்ல உரமாகுவாள்".

எழுதியவர் : சம்யுக்தா ( நரேனி தாசன் ) (20-Jun-20, 2:37 pm)
பார்வை : 152

மேலே