அன்புள்ள அப்பா

அப்பா !

தரையில்
தவண்டுகொண்டிருந்த எனக்கு
கூரையை தொட
கற்றுக்கொடுத்தவன் ...நீதானே

உன் வண்டி சத்தம்
வருமுன்னே...
எனக்கு பிடித்ததெல்லாம்
கண்முன்னே - வந்து போகுமே !

நான் கட்டிய
மண் வீட்டையும்
மலையென காப்பாயே ...

வானவில்லின் வண்ணத்தையும்
விண்மீன்களின் எண்ணிக்கையும்
உன்தோலில் வைத்து சொல்லிக்கொடுப்பாயே ...

உன் விரல் பிடிக்கையில்
உலகம் - ஏனோ
உள்ளங்கையில் -என்ற
உணர்வு ...

சுமந்து ! சுமந்து !!
ஓடி ! ஓடி !!
வலியோடு - நீ
உழைத்ததெல்லாம்
துளிகூட - நானறிவேன் ..

எனை
வீழாத ....
ஆலமரமென வளர்க்க ...
ஆயிரம் விழுதாக
வீழ்ந்து கிடந்தவனே ...

நான்
தடுமாறும் கணங்களில்
தன்னம்பிக்கை - புத்தகமே நீ தானே ...

கடவுளை
கருவறையில்
கண்டதில்லை ...
கண்முன்னே - நீ இருக்கையில்

பாசமுள்ள மகன்
கதிர்

எழுதியவர் : (21-Jun-20, 5:00 pm)
சேர்த்தது : KKathir
Tanglish : anbulla appa
பார்வை : 297

மேலே