முகமூடி

விதவிதமாய் முகமூடி அணிகிறேன்
சார்ந்தோர்களுக்கு ஏற்றார்போல்
அநேக நேரங்களில் முகமூடியை
கழற்றுவதேயில்லை...
எப்போதாவது கண்ணாடி முன்‌ நின்று
கழற்ற முயல்வதுண்டு
அப்போதெல்லாம் முகமூடியுடன்
சதைகளும் பெயர்ந்து வந்துவிடுகிறது

அவ்வப்போது
நினைத்துக் கொள்வதோடு சரி
"முகம் இப்படி இருந்திருக்கலாம்
முகம் அப்படி இருந்திருக்கலாம்" என்று

மற்றப்படி இப்போதெல்லாம்
கண்ணாடியில் முகம் பார்ப்பதே இல்லை

எழுதியவர் : பெருமாள்வினோத் (23-Jun-20, 9:07 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
Tanglish : mugamoodi
பார்வை : 219

மேலே