வஞ்சியைக் கொஞ்ச

வஞ்சியைக் கொஞ்ச


பண்பை எழுதிட வேண்டும் வெண்பா
அன்பின் விவரம் வேண்ட விருத்தம்
வஞ்சியர் நேரில் கொஞ்சிட வேண்டும்
வஞ்சி விருத்தம் மிகமிக நன்று
சந்திலே சந்தம் தவறா எடுத்திட
சிந்துவே சிறந்தது காவடி சிந்து
கும்பலில் சேர்ந்து அடிக்க கும்மியை
கும்மி ஆனந் தகளிப் புவேண்டும்
எங்குமே எப்போ துமேநாம் பாட
தங்கு தடையிலா ஆசிரி யப்பா
தொகைய றாபின் சரணம் தொங்கல்
தொடுப்பு எடுப்பு உருப்படி
அடுக்கியே எத்தனை படைத்தான் தமிழனே

எழுதியவர் : பழனிராஜன் (23-Jun-20, 9:36 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 306

மேலே